90-களில் சிறந்த நாயகனாக அறியப்பட்ட நடிகர் பாபுவின் வாழ்க்கையில் அரங்கேறிய சோகம்.. கதறியழுத பாரதிராஜா.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பாரதிராஜா கடந்த 1990 ஆம் வருடத்தில் என்னுயிர் தோழன் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பாபு என்பவர் அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தில் பாபு தர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார். 

இதன் பின்னர் பெரும்புள்ளி, தாயம்மா ஆகிய படங்களிலும் நடித்த நிலையில், கடந்த 1990 ஆம் வருடத்தில் நல்ல திறமை கொண்ட கலைஞராக அறியப்பட்ட பாபு, சண்டைக்காட்சியில் தனது வாழ்க்கையை இழந்தார். " மனசார வாழ்த்துங்களேன் " என்ற திரைப்படத்தில் சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து கீழே குதித்த சமயத்தில் பாபுவிற்கு அடிபட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் உயிர்பிழைத்து கொண்டாலும், பாபுவால் தற்போது வரை எழுந்து நடமாட முடியவில்லை. இதனால் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. ஓரளவுக்கு உடல்நலம் பெற்று வந்த சமயத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் எடுத்த ஆனந்த கிருஷ்ணா படத்திற்கு நடிகர் பாபு வசனம் எழுதிய நிலையில், இந்த படம் வெளியாகாமல் போனது. 

இந்நிலையில், மீண்டும் அவருக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார். படுக்கையில் தனது வாழ்நாட்களை கழித்து, கிட்டத்தட்ட சுமார் 20 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். 

பாபுவின் உடல்நிலை குறித்து விசாரிக்கப் போன பாரதிராஜா, கண் கலங்கி போன வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது. பாரதிராஜா அவ்வப்போது தன்னால் இயன்ற உதவியை செய்து வரும் நிலையில், திரையுலகைச் சார்ந்தவர்கள் உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director BharathiRaja Visit Actor Babu Treatment Hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->