திண்டுக்கல்: 60 நொடியில் மொத்தமாக எலும்புக்கூடான பைக்.. நடுரோட்டில் கண்கலங்கிய வாலிபர்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் மறவப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருபவர் பேட்ரிக். இவர் தன் தந்தையை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இவர் தனது யமஹா எஃப்.இசட் வாகனத்தில் சென்ற நிலையில், கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு லேசாக தீப்பிடித்துள்ளது. 

உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்க முயற்சி செய்த நிலையில், தீ மளமளவென பரவியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக நெடுஞ்சாலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் வருவதற்குள் இருசக்கர வாகனம் எலும்பு கூடாக மாறியுள்ளது. 

இளைஞர் தீவிபத்தில் இருந்து உயிர் தப்பியிருந்தாலும், தனது ரூ.1 இலட்சம் மதிப்புள்ள வாகனம் தீக்கு கண்முன்னே இறையானதை எண்ணி அங்கேயே கண்கலங்கி நின்றார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Yamaha FZ Bike Fired Luckily youngster Escaped


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal