கொடைக்கானல்: 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து.! சுற்றுலா சென்றவர்களுக்கு அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


சுற்றுலா சென்ற வேன் விபத்திற்குள்ளாகி, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 14 பேர் படுகாயமடைந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. 

வாரத்தின் விடுமுறை நாட்களில் பெரும்பாலானோர் தங்களின் குடும்பத்தினருடன் மலைப்பாங்கான இடங்களுக்கு சுற்றுலா சென்றுவர அதிகளவு விரும்புவார்கள். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்களும், தமிழகத்தின் பிற மாவட்டத்தை சார்ந்தவர்களும் சுற்றுலா செல்வது வழக்கம். 

இந்நிலையில், இன்று சுற்றுலா செல்ல முடிவெடுத்த குடும்பத்தினர், சுற்றுலா வேன் மூலமாக கொடைக்கானலுக்கு சென்று கொண்டு இருந்துள்ளனர். இதன்போது, சுற்றுலா வேன் அங்குள்ள கொடைக்கானல் - வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டு இருந்தது. 

அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டினை இழந்த வேன் 50 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 14 பேரும் உயிருக்காக அலறித்துடித்துள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அவர்களை மீட்க முயற்சி எடுத்த நிலையில், இது குறித்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அனைவரையும் மீட்டுள்ளனர். 

பின்னர், சிகிச்சைக்காக அங்குள்ள திண்டுக்கல், தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் யார்? எங்கிருந்து சுற்றுலா வந்துள்ளனர்? என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Tourist Van Accident Near Vathalagundu Batlagundu went Kodaikanal 14 Feb 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal