திண்டுக்கல்: மலைக்கிராமங்களுக்கு சென்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நத்தம் சட்டமன்ற தொகுதியில் 402 வாக்குப்பதிவு மையங்கள் இருக்கிறது. இதில், லிங்கவாடி மலை உச்சியில் இருக்கும் மலையூர் கிராமமும் அடங்கும். இங்கு செல்ல சாலை வசதிகள் இல்லாத நிலையில், கரடு முரடான மலைவழிப்பாதை வழியாக செல்ல வேண்டும். 

இக்கிராமத்திற்கு ஒவ்வொரு தேர்தலிலும் குதிரைகள் மூலமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். முலையூர் - எல்லைப்பாறை மலையடிவார பகுதியில் இருந்து 4 கிமீ தூரம் பயணம் செய்தால் அந்த கிராமத்திற்கு செல்லலாம். 

இந்த தேர்தலிலும் 3 குதிரைகள் மூலமாக 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுதுபொருட்கள் அடங்கிய பெட்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் மேற்பார்வையுடன் கொண்டு செல்லப்பட்டன.

அந்த தேர்தல் மையத்தில் பணியாற்றும் 4 தேர்தல் உதவி அலுவலர்கள் மற்றும் 4 காவல் அதிகாரிகள் மலைப்பாதை வழியாக நடந்து சென்றனர். இதனைப்போன்று, நத்தம் குட்டுப்பட்டி கரந்தைமலை உச்சியில் இருக்கும் பெரிய மலையூர், சின்ன மலையூர், வலசு ஆகிய 3  முதன் முறையாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. 

இதனைப்போன்று கொடைக்கானல் அருகேயுள்ள வெல்லக்கவி மலைக்கிராமத்திற்கும் குதிரைகள் மூலமாக 7 கிமீ தூரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் அதிகாரிகள் நடந்து சென்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Mountain Voting Booth Using Donkey Went Voting Machine to Mountain Villages


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal