திண்டுக்கல் லியோனிக்கு ₹2,500 தண்டம்..!! யாருப்பா அந்த ஸ்டிரிக்ட் ஆபிசர்..!! - Seithipunal
Seithipunal


திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனிக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். திமுகவில் முக்கியப் பதவிகளில் இருக்கும் திண்டுக்கல் லியோனி பட்டிமன்ற மேடை பேச்சால் 'நகைச்சுவைத் தென்றல்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படக் கூடிய இவர் மேடைகளில் 'டைமிங் ஜோக்ஸ்' அடிப்பதில் கெட்டிக்காரர். சில சமயம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கலிலும் மாட்டிக் கொள்வார். 

அதேபோல் பட்டிமன்றம், கருத்தரங்கம், விவாத மேடை, பொதுக்கூட்டங்கள் என எதுவாக இருந்தாலும் தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் மக்களை ஈர்க்கக் கூடியவர். இதன் காரணமாக கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் கவனத்தை ஈர்த்து திமுகவுக்கு அழைக்கப்பட்டார். கடந்த 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தலும் கூட அதற்கு முன்பும் திமுக அனுதாபியாக கருப்பு சிவப்பு வேட்டி கட்டாமல் ஆசிரியராக இருந்து வந்தார்.

இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட திண்டுக்கல் லியோனிக்கு விபூதி அடித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. சென்னை ஆலந்தூர் பகுதியில் பயணித்த திண்டுக்கல் லியோனின் காரை மடக்கிய போக்குவரத்து காவல்துறையினர் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர், காரின் முன்பகுதியில் எக்ஸ்ட்ரா பம்பர், நம்பர் பிளேட் ஆகிய மூன்று காரணங்களுக்காக ரூ.2,500 அபராதம் விதித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Leoni fined rs2500 by traffic police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->