#BREAKING || திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் ரெய்டு..!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி என்பவர் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2020-2021 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய போது பல்வேறு முறைகளை ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் சென்றது.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தேவையான லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. 

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் இன்று காலை 7:30 முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று காஞ்சிபுரம் மாநகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வந்த 3 அதிகாரிகள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று கடந்த ஜூன் 6-ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய மலர்விழியின் வீட்டில் லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை செய்து வருவது அதிகாரிகளின் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Corporation Commissioner Maheshwari house raided by DVAC


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->