ஊரடங்கால் பறிபோன வாழ்வாதாரம்.. கழுத்தை நெரித்த கடனாளர்கள்.. அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் வெங்கடாசலம் செட்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கங்காதரன் (வயது 38). இவர் தொழில் அதிபராக இருந்து வருகிறார். இவரது மனைவி இலக்கியா. 

இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பூரில் தங்கியிருந்த நிலையில், ரெடிமேட் துணிகளை தைத்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த தொழில் செய்ய சிலரிடம் கடன் வாங்கியிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலை செய்ய இயலவில்லை. 

மேலும், தொழிலும் முடங்கி, கடன் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்களும் அடுத்தடுத்து பல நெருக்கடியை கொடுத்து வந்துள்ளனர். இதனால் கடுமையான மன உளைச்சலில் கிருஷ்ணமூர்த்தி இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த வேடசந்தூர் காவல் துறையினர், கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul business man suicide due to loan


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->