தர்மபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் திடீர் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் பா.ம.க பா.ஜ.க கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்று பா.ம.கவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தர்மபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தர்மபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி பி.எச்டி போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri PMK Candidate Change


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->