6500 கன அடியாக குறைந்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...!
Dharmapuri Hogenakkal water flow reduced to 6500 cubic feet
தர்மபுரி மாவட்டம் சுற்றுலாத் தளமான ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து, தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

இதனால் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி,ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7000 கன அடியாக வந்தது.
மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நீர்வரத்து 7000 கனஅடியில் இருந்து 6,500 கன அடியாக குறைந்துள்ளது.
இதனால் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
English Summary
Dharmapuri Hogenakkal water flow reduced to 6500 cubic feet