விபத்தை ஏற்படுத்த கங்கணம் கட்டிக்கொள்ளும் லாரிகள்.. அச்சத்தில் அரூர், தர்மபுரி மக்கள்.! - Seithipunal
Seithipunal


அரூரில் விதியை மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்திர பிரதேசம், சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு பாரம் ஏற்றிவரும் செல்லும் லாரிகள் உட்பட பல கனரக வாகனங்கள் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, தர்மபுரி மாவட்டத்தில் வருகையில் நெடுஞ்சாலையை தவிர்த்துவிட்டு அரூர் வழியாக சென்று வருகிறது. 

இவ்வாறாக செல்லும் கனரக லாரிகளில் குறிப்பிட்ட அளவு பாரத்தை ஏற்றிச்செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில லாரிகள் அளவுக்கு அதிகமான பாரத்தினை ஏற்றி செல்கிறது. இதனால் லாரி ஒருபுறமாக சாய்ந்து விபத்திற்குள்ளாகும் சோகம் அரங்கேறியுள்ளது. 

இந்நிலையில், தற்போது அரூர் வழியாக டயர்களை ஏற்றிச்செல்ல லாரி எப்போது பாரம் சரிந்து கீழே விழுமோ என்ற அச்சத்தில் சென்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த லாரியின் நிலைமை வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Harur Travelling Lorry Heavy Load and May be Make Accident Peoples Shock


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->