தருமபுரி: காதலனுடன் எஸ் ஆகி செல்கையில் விபத்து.. கழுத்தில் நரம்பு துண்டித்து, பேச்சை இழந்த கல்லூரி மாணவி.! - Seithipunal
Seithipunal


காதலனுடன் இருசக்கர வாகனத்தில் செல்கையில், வாகனம் விபத்திற்குள்ளாகி பெண்ணிற்கு பேச்சு போன சம்பவம் நடைபெற்றுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு கோட்டூர் அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 18 வயது பெண்மணி கவிதா (வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். 

இவருக்கும், தருமபுரியை சார்ந்த 21 வயது வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது. 

இரண்டு பேரும் ஒரே சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்தும், பெண்ணின் தந்தை இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து, காதல் ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் பெண் வீட்டினை விட்டு புறப்பட்டுள்ளார். 

பெண்மணியை கூட்டிச்செல்ல காதலனும், அவரது நண்பரும் கோட்டூருக்கு வந்த நிலையில், பெண்ணை ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் இருசக்கர வாகனத்தில் ஏற்றிவிட்டு தருமபுரி நோக்கி புறப்பட்டுள்ளனர். இவர்கள் புறப்பட்ட சில மணித்துளிகளுக்கு உள்ளாகவே, அங்குள்ள சாலை திருப்பத்தில் திரும்பியுள்ளனர். 

இதன்போது, வாகனம் எதிர்பாராத விதமாக சாலையையொட்டியுள்ள கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. இதில், பெண்மணி கிணற்றுக்குள் விழுந்த நிலையில், வாகனத்தில் இருந்த காதலன் மற்றும் அவனது நண்பன் லேசான காயத்துடன் தப்பியுள்ளார். 

பெண் வீட்டில் இருந்து மாயமான செய்தி இதற்குள்ளாக தெரியவரவே, அவர்கள் பின்னாலேயே தேடி வந்துள்ளனர். இந்நிலையில், கிணற்றுள் பெண் உயிருக்கு போராட, அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பெண்ணின் உறவினர்கள் வந்ததையடுத்து, காதலன் மற்றும் அவனின் நண்பர்கள் இருவரும் பெண்ணை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பெண்ணின் தந்தை, எனது மகள் இறந்துவிட்டால் என விரக்தியில் பேசி செல்ல, பெண்ணின் தாய்மாமா பெண்ணை மீட்டு பெங்களூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளார். 

மருத்துவமனையில் பெண்மணிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது கழுத்தில் நரம்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அவரால் இனி பேச முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாகனம் விபத்திற்குள்ளானதில் கிணற்றில் சேறு இருந்ததால் பெண் உயிர் தப்பியுள்ளார் என்றும் தகவல் தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri girl Escape with Love Boy Bike Accident girl Lost speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal