தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு முதலமைச்சர் வாழ்த்து மடல்! எதற்காக தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக 3 லட்சத்து 92 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதில் தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை பெற்ற மகளிருக்கு வாழ்த்து கடிதம் அவர்களது முகவரிக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு  முதல்வர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல் அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த பணியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்ந்த கிராம நிர்வாக உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த மகளிர் உரிமை தொகை பெற்றவர்களுக்கான வாழ்த்து மடல் அவர்களது வீட்டு முகவரி அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri district women received chief minister letters


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->