#Justin: வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் விவகாரம்.. டிஜிபி அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியதை தொடர்ந்து, இதை பற்றி விசாரணை செய்ய பீகார் அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்தது. பீகார் அதிகாரிகள் கோயம்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை நடத்தியது.

அதனை தொடர்ந்து,  அம்மாவட்ட ஆட்சியாளர்கள் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின், சென்னை தலைமைச் செயலகத்திற்கு விரைந்த பீகார் மாநில அதிகாரிகள் குழு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்திவிட்டு முடிவில் வடமாநில இளஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது வெறும் வதந்தி என்று கூறினார்கள்.

இத்தகைய நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dgp sylendrababu order about Migrantworkers issue 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->