கடல் சீற்றம்.. தனுஷ்கோடியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு..! - Seithipunal
Seithipunal


தனுஷ்கோடியில் கடல் சீற்றம் காரணமாக பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மாவட்டம், தனுஷ்கோடி கடலில் இந்துகள் ஏராளமானோர் புனிதநீராடுவர். இந்நிலையில், பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவில் ஆழ்கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது.  இதனால், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.   கடலில் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தனுஷ்கோடியில் இன்று கடல் கடும் சீற்றத்துடன் இருந்ததால் அலைகள் மிக ஆரோக்ரோஷமாக அடித்து வருகிறது.  இதனால், தனுஷ்கோடி கடலில் பக்தர்கள் நீராட தடைவிதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், கடற்கரைகளில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devoters not allowed in dhanushkodi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->