தமிழகத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம்?... செய்யவேண்டியது என்ன?.. வேளாண்துறை அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் இராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் வெட்டுக்கிளியின் தாக்குதல் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டன் கணக்கிலான உணவுகளை வெட்டுக்கிளிகள் கூட்டாக படையெடுத்து அழித்து வருகிறது. 

இந்நிலையில், வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த பயிர்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துக்களை பயன்படுத்த வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் குறைவு என்று தெரிவித்துள்ளது. 

மேலும், வெட்டுக்கிளியின் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

உயிரியல் கட்டுப்பாடு காரணியான பொட்டாசியம் அனிசோபிளே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து வெட்டுக்கிளைகளை கட்டுப்படுத்தலாம் என்றும், மாலத்தியின் மருந்தினை, தெளிப்பான், பெரிய டிராக்டர், தீயணைப்பு வாகனம் மூலமாக மருந்துகளை தெளித்து வெட்டுக்கிளிலையே கட்டுப்படுத்தலாம் என்றும் தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Department of Agriculture tamilnadu announce prevent Locust attack


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->