தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்..மேலும் 52 பேர் பாதிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது பரவலாக பரவி வரும் நோயாக டெங்கு காய்ச்சல் இருக்கிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்னிக்கை நாளுக்கு நாள் கூடி கொண்டே வருகிறது. 

அந்த வகையில் கோவை அரசு மருத்துவமனையில் 184 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அனுமதிக்கப் பட்டவர்களில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் என்று உறுதி செய்யபட்டு, அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் ஆறு வயது குழந்தை உட்பட 5 பேருக்கும், மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் 14 பேருக்கும், அருப்புக்கோட்டையில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேருக்கும், தஞ்சையில் 3 பேருக்கும், திருச்சி மற்றும் கரூரில் 2 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dengu spread over in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->