கர்ப்பிணியை 6 கிமீ தூக்கி சென்ற அவலம்.! ஆம்புலன்ஸ் வருவதற்குள் அரங்கேறிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வரமுடியாமல் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவரை 6 கிலோமீட்டர் தூக்கிசென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு அருகே பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த சுண்டப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த குமாரி என்பவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கின்றது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பெய்த கனமழையால் வாகனம் உள்ளே வர முடியாத அளவிற்கு பாறைகள் விழுந்துள்ளது.

Image result for baby seithipunal

இதனால், ஆம்புலன்ஸ் வர முடியாத நிலையில், கிராம மக்கள் ஒன்று சேர்ந்த ஒரு கட்டையில் குழந்தை தொட்டில் போல் கட்டி அதில் கர்ப்பிணி பெண் குமாரியை படுக்க வைத்து 6 கிமீ தூரத்திற்கு தூக்கிக்கொண்டு வந்துள்ளனர். கிராம எல்லை முடிந்து பிரதான சாலையை அடைந்த பின்னர் ஒரு சரக்கு வாகனத்தில் அவரை ஏற்றி பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

இருப்பினும், மருத்துவமனை செல்லும் வழியிலேயே குமாரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு மூதாட்டி ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். தாயும், மகனும் நலமுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். பின்னர் குமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delivery without ambulance in erode


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->