5 நாள் தொடர் பொங்கல்  விடுமுறை! 16,932 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு...  - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும்  பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில்  16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க  தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த வருடம் 15-ந்தேதி தொடங்கும் பொங்கல் பண்டிகை அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 விடுமுறை நாட்களுடன் வழக்கமான விடுமுறை தினமான சனி, ஞாயிறும்  சேர்ந்து வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இதனால் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

சிறப்பு பேருந்துகள்  இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் விட திட்டமிடப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 17 ஆயிரம் பஸ்களும் சென்னையில் இருந்து ஆயிரம் பஸ்களும் இயக்க முடிவு செய்யப்படுகிறது.

இதே போல பொங்கல் பண்டிகை முடிந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகிறது. 
இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் கிளம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள  புதிய பேருந்து  நிலையத்தில் இருந்து இயக்கப்படும். 
குறிப்பாக தென் மாவட்டங்கள் சேலம், கோவை நகரங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டு செல் லும். மற்ற நகரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை  இயக்க திட்டமிடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Day Series Pongal Holiday! Tamil Nadu government has decided to operate 16,932 special buses...


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->