தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம்... பதறிப்போன பெற்றோர், அறிவுரை கூறி அனுப்பிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


தேர்வுக்கு பயந்த மாணவர் பக்கத்து மாவட்டத்திற்கு சென்று கடத்தல் நாடகம் ஆடியது காவல் துறையினரின் விசாரணையில் அம்பலமானது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் பகுதியை சார்ந்த 17 வயது மாணவர், அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் மாணவர் அப்பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு சென்று பாடப்புத்தகம் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறி புறப்பட்டு சென்றுள்ளார். 

இதன்பின்னர், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. பின்னர், மதியம் 12 மணியளவில் மாணவனின் தாயார் எண்ணுக்கு அழைப்பு வரவே, மறுமுனையில் பேசிய மாணவர் தன்னை பெண்ணாடம் புத்தர் தெரு ஆர்ச் பகுதியில் மர்ம நபர்கள் கடத்தி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும், கடத்தல் கும்பல் அரியலூர் மாவட்டத்தின் ஆண்டிமடம் அருகே வடுகபாளையம் கிராமத்தில் தேநீர் குடித்துக்கொண்டு இருப்பதாகவும், அவர்களுக்கு தெரியாமல் காரில் இருந்து இறங்கி பெட்டிக்கடையில் உள்ளவரிடம் அலைபேசி வாங்கி பேசுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, மாணவனின் பெற்றோர்கள் காரில் வடுகபாளையத்திற்கு சென்று மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர், இதுகுறித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் மாவட்ட உதவி காவல் ஆணையர் அங்கித் ஜெயின், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையில், மாணவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, மாணவர் பள்ளி தேர்வுக்கு பயந்து கடத்தல் நாடகம் ஆடியது உறுதியானது. இதனையடுத்து, காவல் துறையினர் மாணவருக்கு அறிவுரை வழங்கி, எச்சரித்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Pennadam Man Kidnap Drama Fear of Exam Police Investigation Revokes Truth


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->