#கடலூர் || மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருட்டு., அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


கடலூரில் பொதுமக்களுக்கு பொது விநியோகத்தில் கிடைக்கும் தண்ணீரை கிடைக்கவிடாமல் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்தவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் வீடு வீடாக சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது  20-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மோட்டார்களை பயன்படுத்தி மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்க விடாமல், மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து 20 மோட்டார்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும், இது போல் மற்றவர்களுக்கு தண்ணீர்  கிடைக்காமல், மின் மோட்டார் வைத்து தண்ணீரை திருடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore pathirikuppam water line issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->