விசா மறுப்பு அதிர்ச்சி: டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா பங்கேற்பே கேள்விக்குறி...! - Seithipunal
Seithipunal


இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ளது. 20 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைக்காக பெரும்பாலான அணிகள் தங்களின் வீரர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அமெரிக்க அணி மட்டும் இன்னும் தேர்வில் சிக்கிய நிலையில் உள்ளது.

இதற்குக் காரணமாக, அமெரிக்க அணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த நான்கு முக்கிய வீரர்களுக்கு இந்தியா பயணிக்க விசா மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின் மற்றும் எஹ்சான் அதில் ஆகியோரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விவகாரத்தை அலி கான் சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.

விசா வழங்கப்படாததால், டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதே சந்தேகமாகி விட்டதாகவும், அணியின் தயாரிப்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, அமெரிக்கா தனது உலகக் கோப்பை அணியை அறிவிக்க முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது.

மேலும் இந்த விசா சர்ச்சை அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் வம்சாவளி வீரர்கள் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கும் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த விசா பிரச்சினை உலகக் கோப்பை போட்டிகளின் நடப்பையே மாற்றிவிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Visa rejection shock USA participation T20 World Cup now question


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->