பண்ரூட்டி: முந்திரி ஆலையில் சரமாரி வெட்டுக்குத்து... வெளியான பரபரப்பு வீடியோ.! - Seithipunal
Seithipunal


இடதகராறில் இருதரப்பை சார்ந்தவர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். மேலும், கையில் அரிவாளுடன் ஓட ஓட விரட்டி வெட்டிய வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, பனிக்கன்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் ஏனோக். இதே பகுதியை சார்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர்கள் இருவருக்கும் இடையே இடம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இருதரப்பும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், முந்திரி தொழிற்சாலையில் ஏனோக்கின் மகன் தாமஸ் விஜய், கைகளில் அரிவாளை எடுத்து சென்று வீரமணி என்ற நபரை தாக்கியுள்ளார். இதன்போது, ஆரோக்கியசாமியும், வீரமணிக்கு ஆதரவாக இருந்து, கையில் கிடைத்த பொருட்களை எடுத்து பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். 

இவர்கள் இருவரும் சரமாரியாக தாக்கிக்கொண்ட நிலையில், இதுகுறித்த சி.சி.டி.வி வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இருதரப்பிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore Panruti Land Issue 2 Gang Fight Police Investigation As Per CCTV Footage


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->