"என்எல்சி மற்றும் விவசாயிகள்" இருவர் மீது தவறு உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், வலையமாதேவி பகுதியில் என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக, கடந்த 2006 முதல் 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தை 12 ஆண்டுகளாக விவசாயிகள் தான் பயன்படுத்தி வந்தார்கள்.

கடந்த வாரம் நெல் பயிர்கள் விளைந்த நிலத்தில் கனரக வாகனங்களை இறக்கி என்எல்சி நிர்வாகம் கால்வாய் பணியை தொடங்கியது.

இதற்க்கு பாமக, விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் செய்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்களிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது புதிய சட்டம்.

எனவே, அந்த நிலத்தை தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் என்றும், நெல் அறுவடை செய்யும் வரை இந்த கால்வாய் பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு முறையிட்டிருந்தார்.

இந்த வாழ்க்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்எம் சுபராமணியம், நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த வழக்கில் விசாரிக்க முடியாது. ஏனென்றால் இந்த நிலங்கள் அனைத்துமே பழைய சட்டத்தின் அடிப்படையில் தான் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த புதிய சட்டத்தின் படி முடிவு எடுக்க முடியாது என்று நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

அதேசமயம் என்எல்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது  சம்பந்தமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது,  என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாயை இழப்பீடு தொகையாக வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறந்துள்ளது.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க என்.எல்.சி. நிறுவனம் தவறிவிட்டது என்றும், அதில் பயிரிட்டது விவசாயிகளின் தவறு என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு பிறகு எந்த விவசாய பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என்றும், நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும், அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore NLC issue Chennai HC Order


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->