ஒட்டு போட மறந்த வேட்பாளரின் தேர்தல் முடிவு வெளியானது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் ஆனது முதல் கட்ட தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. 

இந்தநிலையில், கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் மாறன். அவர் டிசம்பர் 27 ஆம் தேதி நடந்த தேர்தலில் மாலை 5 மணிக்கு வாக்களிக்க வந்த அவருக்கு101 வது  எண் டோக்கன் வழங்கப்பட்டது. வாக்களிக்க 5ஆவது வார்டில் வாக்களிக்க நிற்க வேண்டிய மாறன் 4 ஆவது வார்டு வரிசையில் நின்றுள்ளார். 

நாம் தவறுதலாக 4 ஆவது வார்டில் நிற்கிறோம் என்பதை அறிந்து கொண்ட மாறன் உடனடியாக 5 வது வார்டுக்கு சென்ற போது வாக்கு செலுத்துவதற்க்கான நேரம் முடிந்து வாக்குப் பெட்டி சீல் வைத்து விட்டதாக வாக்குச்சாவடியில் இருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாறன், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் எவ்வளோ மன்றாடியும் வாக்குச்சாவடியில் அதிகாரிகள் மாறனை வாக்களிக்க அனுமதிக்க வில்லை. இதையடுத்து மாறன் தனது தலையில் கை வைத்த படியே அந்த வாக்குச்சாவடியிலையே சோகத்துடன் அமர்ந்து விட்டார். 

இந்தநிலையில், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டு வருகின்றன .
இதற்கிடையே தனது வாக்கை பதிவு செய்யாத மாறன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cuddalore candidate win his election


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->