சிவகாசியில் கொடூரம்...! காதலால் நேர்ந்த விபரீதம்...! - பட்டப்பகலில் கழுத்தறுத்து இளைஞரை கொலை செய்த மர்ம நபர்கள்...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்த முருகனின் மகன் பிரபாகரன் (23), லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். வெளிமாநிலப் பயணங்கள் அதிகமாக இருந்ததால், பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு பணிக்காக வெளியூர் சென்றிருந்த அவர், ஒரு வாரத்திற்குப் பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை எம்.புதுப்பட்டிக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு பிரபாகரன் வெளியேறியுள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினரிடம் பதற்றம் ஏற்பட்டது. பல இடங்களில் தேடியும் தகவல் எதுவும் கிடைக்காததால் அவர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

அதே சமயம், அப்பகுதியில் உள்ள கிணற்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மிதப்பதாக சிலர் முருகனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபாகரனின் உடல் கிணற்றில் மிதந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர் எம்.புதுப்பட்டி காவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணையை தொடங்கினர்.காவலர்களின் தொடக்கக்கட்ட விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பிரபாகரன் காதல் உறவில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தப் பெண்ணின் தந்தையும், உறவினர் ஒருவரும் சேர்ந்து பிரபாகரனை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்து பின்னர் கிணற்றில் வீசியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக செவளூர் கிராமத்தை சேர்ந்த ஐந்து பேரை காவலர்கள் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொலைக்கான உண்மையான பின்னணி என்ன, இதில் மேலும் யார் யார் தொடர்புடையவர்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் எம்.புதுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cruelty Sivakasi tragedy caused by love Mysterious individuals murdered young man by slitting his throat broad daylight


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->