17 வயது மாணவிக்கு கொடுமை...! கர்ப்பமானது தெரியவந்ததும் சிக்கிய சித்தப்பா...! - குண்டர் சட்டத்தில் சிறை...!
Cruelty 17year old student When it discovered that she pregnant her stepfather caught Jailed under Goonda Act
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக கைது செய்யப்பட்ட அவரது சித்தப்பா, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.

தேவகோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த அந்த மாணவியின் வீட்டில், அவரது சித்தி குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.இந்த நிலையில், மாணவியின் சித்தப்பா மகேந்திரன், 39, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் குழந்தைகள் நல அதிகாரிகள் மாணவியிடம் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி, மாணவியின் சித்தப்பா மகேந்திரனை கைது செய்தனர்.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட மகேந்திரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் மகேந்திரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
இதையடுத்து மகேந்திரன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமியை பாதுகாக்க வேண்டிய உறவினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Cruelty 17year old student When it discovered that she pregnant her stepfather caught Jailed under Goonda Act