தமிழக சுற்றுலா தலத்தில், பிரபல கிரிக்கெட் வீரர்.! உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்.!  - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் இருக்கும் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையின் மேல் பகுதியில் ஏராளமான தனியார் அருவிகள் இருக்கின்றன. அந்த அருவிகளில் இருந்து மழை காலங்களில் கொட்டும் தண்ணீரே குண்டாறு அணைக்கு வருகை தரும். 

மலையில் கரடு முரடான பாறைகளின் மீது ஜீப் மூலமாக தான் அந்த அருவிகளுக்கு சென்று வர முடியும். இந்த அருவிகளுக்கு மழை மற்றும் குற்றால சீசன் காலத்தில் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் வாட்சன் இந்த குண்டாறு அணை மற்றும் அருவிக்கு வந்திருக்கின்றார். 

மேலும், அணைப்பகுதியில் இருக்கும் கோபால் அருவிக்கு ஜீப்பில் சென்று அதன் அழகை கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளார். தொடர்ந்து, அணைப்பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் சென்று வாட்சன் தங்கினார். மேலும், அங்கிருந்த சுற்றுலா பயணிகளுடன் வாட்சன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 

இரவு நேரத்தில் அங்கிருக்கும் அருவிகளில் குளித்து மகிழ்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்த்து மறுநாள் காலையில் குழுவினருடன் புறப்பட்டு சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குண்டாறு அணைக்கு வந்து அப்பகுதியில் உள்ள அருவிகளில் குளித்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player watson in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->