திமுக துணை சேர்மேனை செருப்பால் அடிக்க முயன்ற பெண் கவுன்சிலர்! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் சேர்மன் நளினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கமிஷனர் கணேசன், பொறியாளர் சண்முகம், திமுகவைச் சேர்ந்த துணை சேர்மன் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர் சினேகா துணை சேர்மன் கார்த்திகேயனை செருப்பால் அடிக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23ஆம் தேதி துணிக்கடையில் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதாக கூறி சினேகாவின் கணவரை துணை சேர்மன் கார்த்திகேயன் ஆதரவாளர்கள் தாக்கி மண்டையை உடைத்ததாக கூறப்படுகிறது.  நடந்து முடிந்த சேர்மன் தேர்தலில் கார்த்திகேயனுக்கு சாதகமாக வாக்களிக்காததால் அவரது தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்துள்ளதாக சுயேச்சை கவுன்சிலர் சினேகா குற்றம் சாட்டியுள்ளார்.

 இதன் காரணமாக நகராட்சி கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது காலில் இருந்து செருப்பை கழட்டி துணை சேர்மன் கார்த்திகேயனை நோக்கி காட்டியவாறு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த வாக்குவாத முற்றியதால் கவுன்சிலர் சினேகா தன் கையில் வைத்திருந்த செருப்பைக் கொண்டு துணை சேர்மனை அடிக்க முற்பட்டுள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்த கவுன்சிலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக கவுன்சிலர்கள் கூட்டத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மேலும் சுயேச்சை கவுன்சிலர்களான ராதா, தாமரைச்செல்வி ஆகியோர் எழுந்து தங்களின் கணவர்களையும் கார்த்திகேயன் ஆதரவாளர்கள் தாக்கி தகாத வார்த்தைகளால் பேசி உள்ளதாக குற்றச்சாட்டு முன் வைத்தனர். இந்த விவகாரம் பெரியதாகவே சேர்மன் நளினி அனைவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தார். 

ஆனால் யாரும் சமாதானம் அடையாதளால் செம நளினி கூட்டம் நிறைவு பெற்றதாக அறிவித்தார். அதன்பின்னரும் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் திருச்செங்கோடு போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

councilor tried to hit the DMK vicechairman with a sandal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->