அடுத்தடுத்து கொரோனாவின் கோரப்பிடியில் திமுக எம்எல்ஏக்கள்.. கலக்கத்தில் ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வந்தது. இதனால் மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வருகிறது.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 21 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை அடுத்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு நேற்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். அதேபோல் மயிலாடுதுறை தொகுதி திமுக எம்பி ராமலிங்கத்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமச்சந்திரன் தனது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive in dmk mla ramachandran


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->