மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்..அச்சத்தில் மக்கள்!
Continuous earthquakes in Myanmar People in panic
மியான்மரில் இன்று அதிகாலை 3.26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 105 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது .இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர், நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது.
இந்தநிலையில் மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 110 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று கடந்த 17-ந்தேதி ரிக்டரில் 4.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது 80 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.
English Summary
Continuous earthquakes in Myanmar People in panic