ஆட்சியா இது?.. மத்திய அரசின் மீது சரமாரி விமர்சனம் வைத்த காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமராக மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று, ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இது குறித்து நாட்டு மக்களுக்கு மோடி எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஒரு ஆரூடத்தில் இந்தியா வேகமான முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று கூறியிருந்தார்.

தற்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் காங்கிரஸ் தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜக கடந்த 6 வருட ஆட்சியில் மக்களின் கவனத்தை திசை திருப்பி, வெற்றுக்கூச்சல் எழுப்பி வருகிறது. இதுவே மோடியின் பாணியாக இருக்கிறது. 

திறமைகள் இல்லாத ஆட்சியால் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மோடியின் இரண்டாவது ஆட்சிக்கால ஒரு வருட நிறைவு மிகுந்த ஏமாற்றத்தையே மக்களுக்கு அளித்துள்ளது. இதயம் இல்லாத அரசால் மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக மோடி வாக்குறுதியை அளித்து மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார். தற்போது மக்களுக்கு செய்தது குறைவுதான்.

2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறிய நிலையில், 2017 - 2018 ஆம் வருடத்தில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத திண்டாட்டத்தை அதிகரித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தி என்பது வெகுவாக குறைந்துள்ளது. பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரார்களாக இருக்கிறார்கள். ஏழைகளின் நிலை மோசமடைந்து செல்கிறது. 73 வருடத்தில் இல்லாத சமத்துவ நிலை ஏற்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் மோடி அரசின் தோல்வி ஆகும்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறிய நிலையில், குருவை பருவத்தில் நடப்பாண்டில் ரூ.50 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. 6 வருட ஆட்சியில் மத பிரிவினை, வன்முறைகள் அதிகரித்துள்ளது. சுயலாபத்திற்க்காக நாட்டின் நலன் தியாகம் செய்யப்பட்டு வருகிறது. இராணுவ வீரர்கள் பலரும் தங்களின் இன்னுயிரை தாயகம் செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress raise complaint about BJP govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->