12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆ.ஹென்றி அவர்கள், வாழ்த்து!
Congratulations to the successful students of Class 12 Board Examinations
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் - தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், 12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ செல்வங்கள் உடனடியாக நடைபெறும் மறு தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முக்கியமாக பெற்றோர்களும், உறவுகளும், நண்பர்களும், சுற்றத்தாரும், சமூகமும் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பது போல, அதைவிட மிக முக்கியமாக தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கூடுதல் ஆதரவும், அனுசரணையுமாக இருந்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையும், ஊக்கமும் கொடுத்து, தேர்ச்சியின்மை என்பது பெரும் குற்றம் அல்ல என்பதை எடுத்துரைத்து, மாணவர்களை உணர வைத்து, அவர்கள் மனம் தளராமல் எதிர்வரும் மறு தேர்வில் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
மேலும் கல்வி தேர்வு வெற்றி மற்றும் தோல்வி என்பது, மாணவர்கள் வாழ்க்கையின் கல்வி பயணத்திற்கான அடுத்த கட்டமே அன்றி, அவர்கள் வாழ்க்கையின் கடைசி கட்டமல்ல என்பதை மாணவர்களுக்கு நாம் அனைவரும் உணர்த்த வேண்டும்.
வெற்றி பெற்ற மாணவர்கள் கற்றலுக்கான அடுத்த கட்ட முயற்சியையும், வெற்றியை நழுவ விட்ட மாணவர்கள் கற்றலுக்கான அடுத்த கட்ட பயிற்சியையும் மேற்கொண்டு, எதிர்காலத்தில் இந்நாட்டின் எடுத்துக்காட்டுகளாக வளர வேண்டுமென உள்ளபூர்வமாக வாழ்த்துகிறேன்,
எதிர்கால இந்தியாவின் எடுத்துக்காட்டுகளாகவும், அடையாளங்களாகவும் விளங்கபோகின்ற மாணவர் செல்வங்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்...
இவ்வாறு மக்கள் நலப் பேரவையின் தலைவர் டாக்டர் ஹென்றி வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
English Summary
Congratulations to the successful students of Class 12 Board Examinations