டாக்ஸி ஓட்டுனர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு.?! ஊரடங்கில் இது இல்லாமல் போய்டாதிங்க.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றது. மக்கள் மத்தியில் இந்த கொரோனா பாதிப்பு மிகப் பெரிய அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகரித்த நிலையில் ஊரடங்கு அமல் படுத்திய பின்னர் பாதிப்புகள் குறைய துவங்கியது.

இதனால் பொதுமக்கள் நிம்மதியுடன் இருந்தனர். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றது. இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நிலையில் விமான மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகளிடம் டாக்ஸி ஓட்டுநர்கள் டிக்கெட் நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது.

அந்த டிக்கெட் நகலை காவல்துறை சோதனையின்போது காண்பித்து விட்டு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. டிக்கெட் நகல் கொடுக்கப்படாத பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Condition Taxi driver


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->