பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் எப்போது வழங்கப்படும்?
coming 3 pongal gift token provide in tamilnadu
வருகிற ஜனவரி மாதம் 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதைமுன்னிட்டு, தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.

அதுமட்டுமல்லாமல், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் வருகிற ஜனவரி மாதம் 3-ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 3 pongal gift token provide in tamilnadu