மாநகராட்சி துப்புரவாளர் பணியில் சேர்ந்த எம்.எஸ்சி மாணவி..! - Seithipunal
Seithipunal


கோவை மாநகராட்சியில் மொத்தமாக நூறு வார்டுகள் உள்ளது. இதில் 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக இருந்த 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப கோவை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்த துப்புரவு வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் என மொத்தமாக 7,300 பேர் விண்ணப்பித்தனர். விண்னப்பித்த அனைவரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அதில் 5,200 பேர் பங்கேற்றனர். இட ஒதுக்கீட்டை அடிப்படையாக கொண்டு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது.

இந்நிலையில்,  காலியாக இருந்த 549 கலிப்பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்ட 321 பேருக்கு துப்புரவு தொழிலாளர் பணிநியமன உத்தரவு வழங்கப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு புதிய துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். 
இதில் கோவை தெலுங்குபாளையத்தை பகுதியை சேர்ந்த மோனிகா(23) என்ற எம்.எஸ்சி. பட்டைய படிப்பை படித்து வரும் மாணவிக்கும் துப்புரவு பணியாளர் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மோனிகாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் கல்லூரி ஒன்றில் எம்.எஸ்சி. படித்து கொண்டு இருக்கிறேன். மாநகராட்சியில் துப்புரவு வேலைக்கு ஆள் எடுப்பதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து விண்ணப்பித்து நேர்காணலில் பங்கேற்றேன்.  எம்.எஸ்சி படித்திருக்கிறோம் என்பதால் துப்புரவு பணி செய்யமாட்டோம் என்பது இல்லை. எந்த வேலையாக இருந்தாலும் செய்ய வேண்டும் என்றார். தனக்கு துப்புரவு வேலை கிடைத்தது தகவல் தெரிந்த தான் மகிழ்ச்சியடைந்தாக மாணவி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

college student join municipality cleaning staff


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->