ஒரு நிதி நிறுவனர் செய்யும் வேலையா இது? கடன் வாங்குவோர் உஷார்.! - Seithipunal
Seithipunal


கோவையில் வசித்து வரும் அசோக் அவரது நண்பர்  ராகுலுடன் திங்கட்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தனர் அப்போது மற்றொரு இருசக்கர வந்தவர்கள் அசோக்கின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர்.

இந்த விபத்தில் ராகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது விபத்து நடந்த இடத்தில இருந்த மர்ம கும்பல் ஒன்று அசோக்கை கத்தியால் குத்தி அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது.  நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து அசோக் கடன் வாங்கிக் கொண்டு வந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

இதனை தொடர்ந்து, இந்த தாக்குதல் தொடர்பாக அசோக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார்,  அசோக் 30 லட்ச ரூபாயை கடன் வாங்கி வந்த நிதி நிறுவன உரிமையாளர் பிரபாகரனுக்கு இந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புயிருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து நிதி நிறுவன உரிமையாளர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 கடனாக பணத்தையும் கொடுத்து விட்டு அதை திருட பின்னால் திருடர்களை அனுப்பியுள்ளார் நிதி நிறுவன உரிமையாளர் பிரபாகரன். கடன் பெற்று வருவோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbature robbery case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->