அரசு நிலத்தை வளைத்துப்போட்ட கோவை பி.ஜி.வி பள்ளி நிர்வாகம்... ஜே.சி.பி கொண்டு நொறுக்கித்தள்ளிய அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்திலுள்ள பன்னிமடை நஞ்சுண்டாபுரம் அருகேயுள்ள வரப்பாளையம் பகுதியில் பி.ஜி.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நிர்வாகத்தினர், அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை சுற்றிலும் சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அரசு அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் அல்லது மதில் சுவர் கட்டக்கூடாது என்று பள்ளி நிர்வாகத்தை அரசு அதிகாரிகள் அறிவுறுத்திய நிலையில், உடனடியாக சுற்றுச் சுவரை அகற்ற பள்ளி நிர்வாகத்திற்கு சம்பன் வழங்கியுள்ளனர். 

ஆனால், தற்போது வரை சுற்றுச்சுவர் அகற்றப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை வடக்கு வட்டாட்சியரின் உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சென்ற வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள், 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுவரை இடித்து தள்ளியுள்ளனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையானது அங்குள்ள மக்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Varappalayam PGV School Occupy Govt Water Resource Land illegally


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->