தாயிடம் உருக்கமாக பேசிய மகள்.. வீட்டிற்கு சென்று பார்க்கையில் தூக்கில் இரண்டு உயிர்கள்.. கோவையில் கண்ணீர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் தாளக்கரை பகுதியை சார்ந்தவர் கதிரேசன் (வயது 30). இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்போது இவர்கள் இருவருக்கும் 1 வயதுடைய யாசவி என்ற பெண் குழந்தையானது இருக்கிறது.

கடந்த சில வருடமாகவே தாமரைச்செல்வி தைராய்டு பிரச்சனை காரணமாக அவதியுற்று வந்த நிலையில், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனில்லை என்ற காரணத்தால் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், கடந்த 30 ஆம் தேதி உறவினரின் இல்ல திருமண நிச்சயத்திற்கு தம்பதிகள் குழந்தையுடன் சென்ற நிலையில், மறுநாள் திருமணத்திற்கும் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இப்போதைய கொரோனா பரவல் காரணமாகவும், கைக்குழந்தை நம்முடன் இருக்கிறது என்றும் கூறி கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னதாக உடல்நலக்குறைவு பிரச்சனை, இப்போது திருமணத்திற்கு செல்ல இயலாத மன விரக்தி என அவதியுற்று வந்த தாமரைச்செல்வி, தனது தாயாருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு உருக்கமாக பேசியுள்ளார். பினர் தனது தம்பியை நன்றாக பார்த்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இவரது பேச்சில் உள்ள விரக்தியை அறிந்த தாமரைச்செல்வியின் தாயார் கனகமணி, தாளக்கரை பகுதியில் வசித்து வரும் மற்றொரு மகன் கிரிதரனிடம் (வயது 24) என்பவரிடம் விஷயத்தை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்க்கையில் தாமரைச்செல்வி மற்றும் பச்சிளம் குழந்தை தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறியழுதது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore mother suicide with child due to Thyroid problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->