காதல் பெயரில் மதம்மாற்றி வாழ்ந்துவிட்டு, குழந்தையானதும் தெருவில் நிறுத்திய ஜிகாத்.. கோவையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் சின்ன பள்ளிவாசல் வீதி கிழக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஷீபானா. இவரது கணவர் அப்துல் பாரி. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

மேலும், காதலித்தவரை கரம்பிடிக்க வேண்டும் என்ற ஆசையில், இந்துவாக இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறிய பெண்மணி, தனது பெயரை ஷீபானா என்று மாற்றியுள்ளார். பின்னர் ஜமாத்தார்கள் முன்னிலையில் முஸ்லீமாக மாறி, கணவருடன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். 

இந்நிலையில், இவர்களுக்கு தற்போது ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், அப்துல் பாரி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்து, அவருடன் தற்போது குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இந்த விஷயம் ஷீபானாவிற்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இது குறித்து கணவரிடம் கேட்ட போது, " நான் அவ்வாறு தான் திருமணம் செய்வேன். உனக்கு தேவை இல்லை என்றால் அமைதியாக இரு.. இல்லையென்றால் எங்கேனும் சென்று விடு " என்று கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார். 

இதனையடுத்து செய்வதறியாது திகைத்த பெண்மணி தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் கூறுகையில், " கணவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். எனக்கு யாரும் கிடையாது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி நான் காதல் திருமணம் செய்து கொண்டதால், கணவர் மட்டுமே எனக்கு அடைக்கலம். என்னை மீண்டும் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் " என்று மனு அளித்துள்ளதாக கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Love Jihaad girl abused request to join with husband


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->