நெஞ்சுல பச்சை.. தலையில குல்லா.. கஞ்சா குடிக்கிக்கு காதல் கேடு.. அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்பட்டு, அடிவாங்கி மரணம்.! - Seithipunal
Seithipunal


கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர் ஒருவரை அடித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலின் பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது. 

கோவை மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி நாராயணசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ரவி. இவரின் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த நிலையில், கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 25 ஆம் தேதி வீட்டில் மணிகண்டன் தூங்கிக் கொண்டிருக்கையில், காவல்துறையினர் என்று கூறி வந்த சிலர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். 

மறுநாள் மணிகண்டனின் தாயார் மீனா காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை செய்த போது, காவல்துறையினர் தனது மகனை அழைத்துச் செல்வதில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி காலையில் கோவை அரசு மருத்துவமனையில் மணிகண்டன் படுகாயத்துடன் அனுமதி செய்யப்படவே, மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். 

இதில், மணிகண்டனை கடத்தி சென்றவர்கள் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே வைத்து தாக்கியதும் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன், கடந்த 29 ஆம் தேதி காலை கடுமையான வயிற்றுவலி மற்றும் இரத்த வாந்தி எடுத்து சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.

விசாரணையில், மணிகண்டன் ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கஞ்சா விற்பனை செய்த வழக்கில், மணிகண்டன் சிறை சென்ற சமயத்தில், பெண்மணி சுரேஷ் என்பவரை திருமணம் செய்துள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த மணிகண்டனுக்கு, இந்த தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து மணிகண்டன் சுரேஷிடம் சென்று, " உன் மனைவி என் காதலி என்றும், அவளை என்னுடன் அனுப்பிவிடு " என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னுடன் அனுப்பாத பட்சத்தில், உன்னை கொலை செய்துவிடுவேன் என்றும் மணிகண்டன் விரட்டவே, பயந்து போன சுரேஷ் தனது நண்பர்கள் சுஜித் மற்றும் மேலும் சிலருடன் இணைந்து மணிகண்டனை துடியலூர் காவல் துறையினர் என்று கூறி வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர். 

பின்னர், தனி இடத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியதில் இரத்தம் வழிந்து காலில் விழுந்து கதறிய நிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், மணிகண்டனை அடித்து துன்புறுத்திய 7 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore Kanja Sales Culprit Love Marriage Torture Murder police Investigation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->