கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு..! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் குழந்தைகளுக்கு எதிரான நிகழ்வுகள் குறித்த போக்ஸோ சட்ட வழக்குகள் அதிகரித்துள்ளது என மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் இராமராஜ் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆலோசனை கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் இராமராஜ் பேசுகையில், "மாவட்ட வாரியாக சமூக நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 6 குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் வலுப்படுத்தப்பட்டு, கடந்த செப். அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விஷயத்தை அடிப்படையாக கொண்டு ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்த வரையில் குழந்தைகளுக்கு எதிரான நிகழ்வுகள் குறித்த போக்ஸோ சட்ட வழக்குகள் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் கோயம்புத்தூர் மாநகரில் குழந்தைகளுக்கு எதிராக 188 வன்முறை சம்பவம் நடந்ததாக புகார் பதிவாகியுள்ளது. இவற்றில் 133 போக்ஸோ புகார்கள் ஆகும். 

குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக மாற்றுதல் மூலமாக குற்ற நிகழ்வுகள் குறையும். 3 மாதத்துக்குள் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore District Pocso Acts Increased


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->