இனி கவலை வேண்டாம்.. உங்கள் வீடுகளுக்கே தேடி வரும்.. முக்கிய திட்டத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் முக ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று  தொடங்கி வைக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் பலரும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார். மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்திற்கு ஒரு முறையாவது டயாலிஸிஸ் செய்து வருகின்றனர்.

இந்த நோயாளிகளில் பலர் பல காரணங்களால் தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. ஆகையால், ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்து தேவையான மருந்து பொருட்களை வழங்குவதற்கும், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிப்பது, பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவோருக்கு, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை அளிப்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் மக்கள் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதையடுத்து, மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு இன்று முதல் வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin today launch new plan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->