பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு? சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னது என்ன.?! - Seithipunal
Seithipunal


நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, "பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். 

இதற்க்கு இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், "ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அவரின் கருத்தைச் சொல்லி உள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை சரிந்து கொண்டே இருந்தாலும், அதற்கு ஏற்றது போல் விலையைக் குறைக்காமல், இதன் மூலம் கிடைத்த உபரி வருவாயை தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.

சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் பாசாங்கு காட்டுவது போல் இந்த தேர்தலுக்கு முன்பாக வரியைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு. தேர்தல் முடிந்த பின்பு விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை உயர்த்தியது மத்திய அரசு" என்று தெரிவித்தார்.

இதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அளித்துள்ள பதிலில், "முற்றிலும் ஒருதலைப்பட்சமாக பிரதமர் மோடி தவறான அறிவுறுத்தலை தெரிவித்திருக்கிறார். ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு ரூபாய் மானியமாக கடந்த 3 ஆண்டுகளாக வழங்குகிறோம்.

மாநிலங்களை நீங்கள் அவமானப்படுத்துவது உங்களின் கேவலமான செயல்திட்டம். மக்களின் சுமையை குறைக்க மத்திய அரசு என்ன செய்துள்ளது? ஜனநாயகத்தை குப்பையில் போடாதீர்கள். எங்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்" என்று பதிலளித்துள்ளார். 

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பிதரமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்துள்ளார். அதில், "பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநிலங்கள் குறைக்கக் கோருவதற்கு பிரதமர் வெட்கப்பட வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தெலுங்கானா மாநிலத்தில் எரிபொருள் வரி உயர்த்தப்படவில்லை.

மாநிலங்களைக் கேட்பதற்கு பதில், மத்திய அரசால் வரியை ஏன் குறைக்க முடியாதா? நீங்கள் உயர்த்திய வரிகளை விளக்குங்கள்" என்று பதியளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அளித்துள்ள பதிலில், "மும்பையில் பெட்ரோல் விலையில் மத்திய அரசுக்கு 31.58 ரூபாயும், மாநில அரசுக்கு வரியாக 32.55 ரூபாயும் உள்ளது. எனவே மாநில அரசால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று சொல்வதில் உண்மை இல்லை" என்று பதிலளித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin say about petrol tax pm modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->