கல்லூரி நண்பர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த டி.பி கஜேந்திரன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "பிரபல இயக்குனரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான இனிய நண்பர் திரு டி.பி கஜேந்திரன் அவர்கள் மறைவுவுற்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்கள் ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதுடன் பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி கலை உலகத்திற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்பொழுது எதிர்பாராத விதமாக அவர் உடல்நல குறைவால் காலமாகி இருப்பது வேதனை அளிக்கிறது.

டி.பி கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin condoles for actor and director TPGajendran death


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->