''திராவிட மாடல்'' பக்கம் தான் மக்கள்... முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்கள் சேர்ந்த 13,653 பயனாளிகளுக்கு ரூ. 656 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

அப்போது விழாவில் பேசிய முதல் அமைச்சர், டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக திறந்து வைத்ததிலும் மிக்க மகிழ்ச்சி. 

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை, காவேரியால் செழிப்போடு இருக்கும் மாவட்டம். தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவோணத்தை தலையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும். 

தமிழக வரலாற்றிலேயே கிராம புற பட்டாக்களை கணினி மூலமாக வழங்குவது இதுதான் முதல் முறை. மயிலாடுதுறையில் ரூ.30 கோடியில் மீன் இறக்குதளம் அமைக்கப்படும். 

மூன்று மாவட்ட கல்லூரிகளுக்கு 1642 கணினிகள் வழங்கப்படும். எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் தி.மு.க அரசு செயல்படுகிறது. 

நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் 2 லட்சம் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர். முதல்வர், அமைச்சர், துறை செயலாளர், அதிகாரிகள் மக்களை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை கேட்டு அறிந்து நிறைவேற்றி வருகின்றனர். 

தமிழக மழை வெள்ளத்திற்கு ஒரு ரூபாய் கூட தராதவர்களை பார்த்து பொதுமக்கள் ஏமாற மாட்டார்கள். திராவிட மாடல் அரசு பக்கம் பொதுமக்கள் எப்போதுமே துணை நிற்பார்கள் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk Stalin speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->