கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: முதல்வர் திறப்பு! - Seithipunal
Seithipunal


கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். 

செங்கல்பட்டு, கிளாம்பாக்கத்தில் ரூ. 400 கோடி செலவில் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. 

பேருந்து நிலைய பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மழை நீர் வடிகால் அமைப்பது, பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வந்து செல்ல வசதி அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வந்தது. 

பின்னர் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 
செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த பேருந்து நிலைய திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

clambakkam bus stand chief minister inaugurate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->