தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் - கேரளா முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! - Seithipunal
Seithipunal


தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் என்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்து, விவசாயம் பாதிக்கும் என்று பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வலியுறுத்தி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், "தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை.

தமிழ்நாடு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் அடங்கிய முழு விவரங்களை அளிக்க வேண்டும்" என்று முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chilanthiyar check dam issue mk stalin letter to pinarayi vijayan


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->