கேரளாவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாரகன் தான் என் அரசியல் குரு - கேரளா பாஜக எம். பி. சுரேஷ் கோபி..!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக பாஜக கேரளாவில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையயடுத்து கேரளாவில் வென்ற முதல் மற்றும் ஒரே பாஜக எம். பி. என்ற பெருமையை நடிகர் சுரேஷ் கோபி பெற்றுள்ளார். 

சமீபத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக சுரேஷ் கோபி பதவி ஏற்றார். இதையடுத்து சுரேஷ் கோபி கேரளாவில் உள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான கருணாகரனின் நினைவிடமாக முரளி மந்திருக்கு சென்று இருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுரேஷ் கோபி, " காங்கிரஸ் மூத்த தலைவர்  கருணாகரனும்,மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஈ. கே. நாயனாரும் தான் அரசியலில் எனது குருவாக கருதுகிறேன். இந்திரா காந்தியை நாம் இந்தியாவின் தாயாக பார்க்கிறோம். அதுபோல் தான் கேரள மூத்த தலைவர் கருணாகரனின் மனைவியை  நான் அம்மா என்று அழைப்பேன். 

எனக்கு கருணாகரன் மீது மிகப்பெரிய மரியாதை இருந்தது. எனது தலைமுறையில் ஒரு துணிச்சலான தலைவராக அவர் இருந்தார். அவரது கட்சியின் மீதும் எனக்கு ஒரு எப்போதும் ஒரு விருப்பம் உண்டு. இது எனது தனிப்பட்ட கருத்து தானே அன்றி, அரசியல் கருத்து அல்ல.

நான் சார்ந்திருக்கும் கட்சியின் மீதும் எனக்கு விசுவாசம் உண்டு. எதிர்க் கட்சி தலைவர்களின் மீது நான் கொண்டிருக்கும் மரியாதை இயல்பாகவே என் இதயத்தில் இருந்து வருவது" என்று சுரேஷ் கோபி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala Thrissur MP Suresh Gobi Speaks About Other Party Leaders


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->