சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு- அக்டோபர் 11ம் தேதி தள்ளிவைப்பு! - Seithipunal
Seithipunal


சிதம்பரம், நடராஜர் கோவிலில் கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022ம் ஆண்டு மே 17ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில், கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தீட்சிதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ள கனகசபையிலிருந்து தரிசிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிபதிகள், தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரின் வழக்கை எப்படி தாக்கல் செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram Nataraja temple case October 11 adjournment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->