சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வாக்கு எண்ணிக்கை மையங்களில் 7 அடுக்கு பலத்த பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் நேற்று (6 ஏப்ரல் 2021) ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய 3 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததும், வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சீல் வைத்தனர். 

இதனையடுத்து, இந்த 3 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சிதம்பரம் சி.முட்லூர் கருமாரியம்மன் கோவில் அரசு கலைக்கல்லூரியில் வாகனம் மூலமாக கொண்டு சேர்க்கப்பட்டது. 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்ட நிலையில், கருமாரி அம்மன் அரசு கலைக்கல்லூரியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, உதவி மாவட்ட ஆட்சியர் மதுபாலன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு, 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கு சி.சி.டி.வி காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chidambaram Kattumannarkoil Bhuvanagiri Vote Counting Booth 7 Strength Protection


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->